Tuesday, June 24, 2008

tester


சந்திரமுகியில் கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் என்று கமலும் நயன்தாராவும் பாடிக்கொண்டிருந்த காலை வேளையில் கண் விழித்தேன். என்ன நேரம் அதுக்குள்ள தூக்கம் வேண்டிக்கிடக்கு என்று பொண்டாட்டியின் வசவோடு நாள் துவங்கியது.

வெய்ட் வெய்ட்...

சந்திரமுகியில் கமலா? வாட் த ஹெக்? ஓ ஏதாச்சும் ரீமிக்ஸ் போட்டிருப்பான் போல டி.வியில..

"சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க‌, சாப்பாடு வாங்கிட்டு வரணும் ஹோட்டல்ல இருந்து.."
"சரி சரி இதோ வந்துடறேன்"

ஏதோ இடிக்குதே! வாங்க போங்கனு மரியாதை எல்லாம்... என்ன இது புதுசா இருக்கு?

ம்ஹூம் ம்ம்ஹூம் ம்ஹூம் ம்ம்ஹூம் ம்ம்ம்ஹூஹூம்....(கொஞ்ச நேரம் பாட்டோட ஹம்மிங்).
கமல் கூட நயன்தாரா ஜோடியும் நல்லாத்தான் இருக்கு. ஆனா அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிச்சதே இல்லயே!!! என்ன நடக்குது இன்னைக்கு?

"ஏய்"
...
"ஏய்"
...."இங்க நான் கூப்பிட்டுகிட்டு இருக்குறது காதுல விழுதா இல்லையா?"
"விழுது விழுது, இதே வேலையா போச்சு உங்களுக்கு. குளிக்க போகும்போது துண்டு கூட இல்லாம போறது....இந்தாங்க துண்டு"
"அட இதுக்கு கூப்பிடல டி. சந்திரமுகி படத்துல யார் நடிச்சது?"
...
சே பாத்ரூம் வரைக்கும் வந்த பொண்டாட்டிகிட்ட இதை போயா கேட்பாங்க. நல்ல சான்ஸ், டைமிங் மிஸ் ஆகிடுச்சு :( இன்னும் 14 மணிநேரம் இருக்கு.

"என் சேலை நுனியால் உந்தன் தலை துடைப்பாயே அது கவிதை..."
"என்ன பாட்டு பாடறீங்களா?"
"சே சே இல்லடி. அப்ப‌டி எல்லாம் நீ பாட மாட்டியா? அதிருக்கட்டும் சந்திரமுகில யாரு நடிச்சது?"
"என்ன ஆச்சு காலையில இருந்து? ஒரே பாட்டுதான், நயன்தாராதான்... ப்ராஜெக்டுக்கு வீட்ல இருந்து சப்போர்ட் குடுத்ததெல்லாம் போதும். என்ன செய்யறீங்கனு தெரியல‌"
"அம்மா தாயே, எனக்கு நயன்தாரா கதைஎல்லாம் வேண்டாம். சந்திரமுகி பாட்டுக்கு கமல் ஆடிகிட்டு இருந்தானே காலையில, எப்படி?"
"இதென்ன கதையா இருக்கு. கமல் படத்துல கமல் இல்லாம பின்ன என்ன ரஜினியா?"
"உனக்கென்னடி ஆச்சு?"

"காலையிலயே சினிமா கதை எதுக்கு? சரவணபவன் போய் காடை பிரியாணி வாங்கிட்டு வாங்க‌"

"என்ன கடுப்பேத்தாதடி ப்ளீஸ். சரவணபவன்ல காடை பிரியாணி?"
"என்னங்க ஆச்சு உங்களுக்கு? இப்போ என்ன ப்ரச்சினை?"
"சரவணபவன்ல எப்போதிலிருந்து காடை போட ஆரம்பிச்சாங்க? அதுவும் காலையில‌"
"இதுக்கா இவ்வளவு அலம்பல் பண்ணினீங்க? எனக்கு என்னங்க தெரியும். எப்போ ** போட ஆரம்பிச்சாங்களோ அப்போ"
"ஏய், சரவணபவன் ஒரு வெஜிடேரியன் ஹோட்டல் டி"
"அச்சோ நீங்க சரவணபவனையும் முனியாண்டி விலாஸையும் குழப்பிக்கிறீங்க. முனியாண்டி தான் வெஜிடேரியன். சீக்கிரம் வாங்கிட்டு வாங்க எல்லா வீட்லயும் தூங்கிட்டாங்க‌"

இனியும் நான் கத்தவில்லை என்றால் கதையை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்ல முடியாது.
"
என்ன நடக்குது காலையில இருந்து, சந்திரமுகியில ரஜினிக்கு பதிலா கமல் நடிக்கிறான், சரவண‌பவன் நான்வெஜிடேரியன் ஹோட்டல்னு சொல்ற, காலையில போய் தூங்கணும்னு சொல்ற. எனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?"

அந்த கடைசி வரியை நான் பேசியிருக்கக்கூடாது.

ஓவர் டூ கீழ்ப்பாக்கம்.

டாக்டர் என்று சொல்லப்பட்டு என்முன் உட்கார்ந்திருப்பவர் வக்கீல் போல் கருப்புகோட் அணிந்திருக்கிரார். இதைச்சொன்னால் நம்மை பைத்தியக்காரன் என்பார்கள்.
"இவருக்கு வந்துருக்க பிரச்சினை இப்போ பரவலா வந்துகிட்டு இருக்கு. IT field ‍ல இருக்கிறவர்களுக்கு இது அதிகமா தாக்குது. அவங்களா ஒரு virtual உலகத்துல வசிப்பாங்க. அவங்க நினைச்சிகிட்டு இருக்க உலகம்தான் கரெக்ட்னு சொல்லுவாங்க..............."

போதும்யா போதும்.

இதை விட எவனாலும் தெளிவா விளக்கமுடியாது.

"என்னங்க நீங்க கொஞ்ச நாள் ஆஃபீஸ்லாம் போகாதீங்க."
"சரி"
"நல்லா ரெஸ்ட் எடுத்துக்கங்க‌"
"சரி"
"என்னங்க சரியா பேசவேமாட்றீங்க? என்னை ஞாபகம் இருக்கு இல்லை?"
"ஞாபகம் இல்லாமலா... நீ என் பொண்டாட்டி"
"அய்யோ அய்யோ என் தலைஎழுத்து இப்படி ஆகிடுச்சே. தொட்டு தாலி கட்டின வப்பாட்டியை வாய் கூசாம பொண்டாட்டினு சொல்றாரே? ஏதாவது பொண்டாட்டி கிண்டாட்டி வச்சிகிட்டு இருக்கீங்களா எனக்கு தெரியாம?"
_____o0o______

அப்பாடா... ஒரு மாதிரியா ஒரு கதைங்கற பேர்ல ஒன்றை எழுதியாச்சு. ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கும்னு தெரியலை. டிவியில வழக்கம் போல மொக்கை சீரியல் தானா?

"உலகத்த்த்தொலைக்காட்சிகளில் ம்ம்ம்முதன்முறையாஹ கமல் நயன்தாரா இணைந்து கலக்கிய சந்திரமு......."

Thursday, May 29, 2008

mic testing 2

mic testing 2

Labels:

mic testing 1

mic testing 1

Labels: